உன்னிடம் காதல் சொன்னால் - கவிதை போட்டி

 மலருக்கும் உனக்கும் ஒரு வித்தியாசம்

மலருக்கு வாசம் அதிகம் உனக்கு பாசம் அதிகம்

அளவுக்கு மிஞ்சிய வாசம் மூக்கைத் துளைக்கும்

அளவுக்கு மிஞ்சிய பாசம் இதயத்தை துளைக்கும்

கவிஞன் ஒருவன் சொன்னான் காதலை சாக்கடை என்று!

நான் சொல்கிறேன்- அதை நறுமணங் கொண்ட

பூக்கடை என்று உன்னிடம் காதல் சொன்னால்- அல்லது

நீ என்னிடம் காதல் சொன்னால்

நான் மண்ணீரலில் மரம் வளர்ப்பேன்

கல்லீரலில் உன்னை சிலை வடிப்பேன்!!!

மு.பூபதி
Previous Post Next Post