என் வாழ்வின் மழலை உலகினை தேடி - கவிதை போட்டி

 என் வாழ்வின் வாய்மையே

மழலை உலகில் என்னுள் பிறந்தாய்

வாழ்வின் வழியில் மெதுவாய் பிரிந்தாய்

உன்னை போல பொய் வேடமணிந்தும்

என் வாழ்வின் வெற்றிடம் எவ்வாறு நீங்கும்

உன்னை எங்கும் என் கண்கள் தேடும்

ஆனால் மனமோ சிறு பலனையே நாடும்

அதை அளிக்கும் பொய்யின் பக்கம் சாயும்

இருப்பினும் என் வாழ்வின் வளம் நீயே ஆவாய்

ஓடும் உலகில் ஊமை ஆனாய்

உந்தன் உதயம் எண்ணி காத்திருக்கிறேன்

என் வாழ்வின் மழலை உலகினை தேடி


Mohamed Akheel.M
Previous Post Next Post