காதல் என்ற சொல் - கவிதை போட்டி

 
கவிதைகள் தோற்குதே காதலின் முன்னே

கனவுகளும் முளையுதே காதலின் உள்ளே

தாயின் காதல் தொடங்கும் முன்னே

தந்தையின் காதல் தொடரும் அன்றே

தாரத்தின் காதல் தொடர்ந்த பின்னே

தம்போன் காதல் திரிந்த பிறகும்

காதல் என்ற சொல் கலைந்தபின்னும்

கரையின் ஓரம் மிதந்து நீந்திடுமே

எனக்குள்ளும் அந்த காதல் காண்கிறான்

நிலவின் மீது மிதந்து செல்கிறேன்

வடிவம் மீறி வானில் செல்கிறேன்

வந்து மீண்டும் மெல்லப்பாதம் காண்கிறேன்  

இந்த காதல் காணாதவர் காட்டிலே

காயம் எங்கும் காணும் காதலே

காற்றில் மிதந்து செல்கிறாய்-நெஞ்சம்

காயும் ஈரம் காணும் நொடியிலே

தஞ்சம் கொண்டு வஞ்சம் செய்கிறாய்.


Previous Post Next Post