கடலின் நீலத்தை மையாக்கி.....
மலையினை குடைந்து உள் ஊற்றி....
என் கற்பனைக்கு உயிர் ஏற்றி.....
எழுதும் கவிதை இதுவன்றோ இல்லை.....
என்னுள் சிக்கித்தவிக்கும் மனக்குமுரல்களை
இவ் இயற்கையிடம் வைக்கிறேன் கேளுங்கள்...
அடிக்கடி தோன்றி மறையும் பல்லிகளின் சத்தத்தில்.....
இரவில் கூச்சலிடும் சிறிய பூச்சீகள்
மற்றும் கூவும் பறவைகள் நடுவே.....
சலிப்பின்றி குரைக்கும் நாய்களுக்கு இடையே.....
தென்றலே இல்லாத அந் நடுஇரவில்
பளிச்சென்று மின்னிடும் அவ்ஒளியின் நிழலில்....
உறங்க மறுக்கும் என் விழியின் இடையில்.....
சிந்தித்துக் கொண்டே எழுதும் கவி இது.......
செ.ஷியாம்