கல்லூரியின் இறுதிநாள் - கவிதை போட்டி

 பேசமாட்டார்களா ? என்று ஏங்கிய அன்பானவர்கள் 
                  இன்றும் பேசவேண்டாம் என்றெண்ணிய நினைவுகள்  
கைக்கோர்த்து நடந்த தோழியுடன் - கைத்தடம் 
                  பட்ட இடமெல்லாம் எடுத்த புகைப்படங்கள் 
கண்ணீர் கம்பளையில் கடைசி நாளில் 
                  கையெழுத்திடப்பட்ட டைரியின் கடைசி பக்கங்கள் 
நான்வவாழ்ந்த நியாபகார்த்தம் என்று மரம்நட 
                  வேண்டிய இடத்திலுருந்து நானெடுத்த கன்றுகள் 
உன்கண்கள் எங்களை எதிர்நோக்காதா ? என்றிருக்கையில் 
                   உனக்குரலோசையில் ஒலித்த எங்கள் பெயர்கள் 
வழியனுப்ப வரஇயலாது என்ற உதடுகள் 
                   வழியனுப்ப வரமாட்டாளா ? என்றெதிர்ப்பார்த்த கண்கள் 
இறுதி ஆண்டில் இறுதி நாளில் 
                   இறுதியாக எழுதிய இறுதி தேர்வு 
கண்டித்து வழிநடத்திய கலகலப்பூட்டிய ஆசிரியர்களிடம் 
                   கைக்குலுக்கி வாங்கி வந்த வாழ்த்துக்கள் 
  இனி தொடராத கல்லூரி பயணம் இனிப்புடன் வழங்கிய பரிசுகள் 
                    இனிமையான நினைவுகள என்றும் அன்புடன்......

லட்சுமி மு

 

Previous Post Next Post