பால்வண்ணம் பிள்ளை - கவிதை போட்டி

பகலவனின் பாராபட்சமின்றிய வாட்டத்தால்,

சிறு மரத்தின் நிழலின் அருகே!

கரங்களில் சேற்றை குழைத்த

முகமெல்லாம் பூசிக்கொண்ட இளம் பிஞ்சை...!

சிட்டெறும்பு முத்தம் கொடுக்க!

கண்களில் கரிய மை வழிந்து!

 பால் வண்ண முகத்தை தாண்டி

நெஞ்சுக் குழியை ஈரமாக்கியதால்...!

விக்கலின் சத்தம் சற்றே அதிகமாய்

அம்மா அம்மா என்ற ஓசையை அடக்கியதே...!

கடும் வெயிலுக்கு ஒதுங்கிய வாகன ஓட்டி கட்டி அணைக்க!

யாரென பாராது ஒட்டிக்கொண்டது அப்பிஞ்சு மனம்...!

பெற்றவள் தத்துக் கொடுத்துவிட்டாள் பரவாயில்லை!

வீதியில் விட்டெரிந்துவிட்டாள்...!

என்பதை எண்ணி பயனில்லை என்று கருதிய நற்கரம்

அவ்விளம் பிஞ்சை தன்னுடன் வளர்த்ததே!

தன்னால் முடிந்த இன்பங்களை அபப்பிள்ளைக்கும்

வழங்கியே காலத்தின் கணக்கின்படி வாழ்ந்தவரோ?

பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும்

பிள்ளைகளை காயப்படுத்தி விடாதீர்கள் என்று

கண்ணீரை மையாய் கொண்டு எழுதிய கவிதையை முடிக்கிறான்

அப் பால்வண்ண முகம் மாற பிள்ளை வளர்ந்த பின்...!

சௌமியா தட்சணாமூர்த்தி



Previous Post Next Post