பிள்ளைச் செல்வமே - கவிதை போட்டி

 ஏங்கி ஏங்கி கிடைத்த என் பிள்ளைச் செல்வமே

கனவாய் நிறைந்த நீ மடியில் நிறைந்தாய்

மடியில் நிறைந்த நீ கையில் நிறையாமல் போனதேனோ?

உன்னை எதிர்ப்பார்த்திருந்தேன் பத்து திங்களில்

நீயோ கலைந்தாய் மூன்று திங்களில்

தவமின்றி கிடைத்த வரமாய் உன்னை நான் எண்ண

தவமிருந்தால்தான் வரமாய் வருவேன் என்று நீ சென்று விட்டாய்

என் மீது என்ன தீராத கோபமோ?

கோபம் தீர வழி செய்வேன்‌, என்னுள் நீ மறுபடியும் ஜெனிக்க

தவமிருந்து காத்திருக்கிறேன் உன் வருகைக்காக............


VIJAYALAKSHMI P

Previous Post Next Post