தாயும் தன் பிள்ளையும் - கவிதை போட்டி

 ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைதனைக் கடந்து,

வளர்ந்து தனி ஒரு உயிராய் உயரவே உழைக்கிறாள்.

ஆனால், சில உயர்வுகள் அவளை உருக்கத் தான் செய்கிறது.

தன் பிள்ளை நடை பழக நடையாய் நடக்கும் அவள், 

இனி அவள் துணை வேண்டாம் என 

கை உதறி தன் பிள்ளை நடந்த முதல் தருணம்,

அவள் மனம் கனக்கத் தான் செய்கிறது.

தன் பிள்ளை பள்ளி சென்று பயில பயிற்றுவிக்கும் அவள், 

அவள் பிள்ளை பள்ளிப் படியேறி பாராமுகமாய் செல்லும் முதல் தருணம், 

அவள் மனம் ஒரு கனம் கனக்கத் தான் செய்கிறது.

தன் பிள்ளை பிறருடன் பழகப் பாலம் அமைக்கும் அவள், 

தன்னை மறந்து நண்பர் தேடி அவள் பிள்ளை செல்லும் முதல் தருணம், 

அவள் மனம் ஒரு கணம் கனக்கத் தான் செய்கிறது.

இனி ஒரு முறை கணப்பொழுதேனும் தன் கருவறையில்

 தன் குழந்தையைத் தனதாக்கிக் காக்க இயலாதா?என்ற கலக்கம்,

 அவள் காலத்தின் கடைசிவரை அவளைக் கடக்கத் தான் செய்கிறது.

சாரல் எழுத்து
Previous Post Next Post