நம் நட்பு - கவிதை போட்டி

 தோழி! உன்னை நானும் என்னை நீயும்,

 பார்க்காத நாட்௧ள் உண்டு

ஆனால், நினைக்காத நாட்கள் இல்லை! 

காலங்௧ள் கடந்துபோன பிறகும்,,

கலையாத கனவாய் வாழ்கிறது நம் நட்பு!

 மழலையைச் சுற்றும் தாயின் மனம் போல,

என் மனமானது, நம் நட்பின்

 நினைவுகளைச் சுற்றிக்கொண்டிருக்கின்றது...,

நாள்முழுவதும், என்ன பேசுகிறோம் என்பது

 கூட தெரியாமல், பேசி சிரித்தோம்.., 

சின்ன சின்ன சண்டைகள் போட்டோம், 

சில நிமிடத்திற்க்குள் அதை மறந்து போனோம்.

கோபம் என்பதே மனதுக்குள் இல்லாமல் 

கோபமாய் இருப்பது போல் நாடகமாடினோம்..,

என் தோளில் நீயும், உன் தோளில் நானும் சாய்ந்து,

 இன்பம், துன்பம் அனைத்தையும் மறந்து, 

இவ்வுலகை ரசித்தோம், நம் நட்பு, கருவறையில்

 தோன்றவில்லை, ஆனால், கல்லறை வரை தொடர்கிறது,,,

நம் நட்புக்கு ஆதி உண்டு அந்தம் இல்லை! 

காலத்தின் ஓட்டத்தில் தொலைந்து போனோம் நாம்,

தொலையவில்லை நம் நட்பு..!

 நம் நினைவுகள் மனதுக்குள் நிழலாடும் போது,

விழியோரம் வழிந்தோடும் கண்ணீர்த்துளிகளும்

 இதழோரம் எட்டிப்பார்க்கும் புன்சிரிப்பும்,

சொல்லாமல் சொல்கிறது இதயத்துடிப்பாய்

 நமக்குள் துடித்துக்கொண்டிருப்பது,

"நம் நட்பு "என்ற உண்மையை….,


Anupriya.V

Previous Post Next Post