திறவாத கதவொன்றை திறந்தேன்
என்றும் பிரியாத வரமொன்றை அடைந்தேன்
நங்கை நினைவாலே நனையாத நாளின்றி நனைந்தேன்
கனவின்றி கலையாத நிஜ கதையொன்றில் கலந்தேன்
மாறாத துன்பங்கள் மறையாத காயங்கள்
மாதவி அவள் மடி மீது தலை சாய்த்த மறு நொடியில்
மாயமாய் மறைந்ததே இனி பிரிவுக்கும் பிரிவொன்றை பரிசளித்து
இணைபிரியா இன்ப வாழ்வில் இணையாக இணைவோம்
இறவாத நம் காதலால் புது உலகையே படைப்போம்
SIVAKUMAR S