நானிருந்த எம் தாயின் கருவறையே எனக்குள்ளும் நீயே
பெண்மை பேச வைத்து ஜனனம் செய்தாய் ஈயிருரை இருமுறை...
உனக்கும் ஒரு விடுமுறையோ இப்பொழுது ...
நீயாக செல்லவில்லை நானாக அனுப்புகிறேன் நன்றி சொல்லியே...
நான் ஒய்வெடுக்கும் காலம் வரை நீயிருப்பாய் என நினைத்தேன்
காலமோ வேறு சொல்கிறது வேதனையுடன்...
என்னில் மலர்ந்த " கருவறையே " நீ முன்னே செல்
நானும் வருகிறேன் பின்னே ஒர் நாள்...
ஆயினும் நீ விதைத்து செல்கிறாய் இன்னொரு
பெண்மையை " மகளாய் " என்னில் பெருமையுடன் ...!
அம்மு தண்டபாணி