இந்திய பெண்கள் - கவிதை போட்டி

 தவறென்று தெரியும் போது
     தட்டிக் கேட்க முற்படுபவள்.

தனக்கென இடம் பிடிக்க
      தடைகள் பல கடப்பவள்.

துச்சமென கருதிய இடத்தில்
    துணிந்தே நிற்பவள்.

உடைந்து போகாமல்
      உயர்ந்து செல்ல முயல்பவள்.

அன்புக்கு மட்டும்
      அடங்கி போக முற்படுபவள்.

வேதனைக்கும்
   வேடிக்கை காட்டி  வென்று எழுபவள்.

கற்று தேர்ந்து
   கனவுகளை எட்டிப் பிடிக்க முயல்பவள்.

நம்பிக்கை கொண்டு 
     நாளும் நடைப் போடுபவள்.

பல அவதாரம் எடுத்து
     பகைமையை துறந்தவள்.

அவளுக்கு நிகர் அவளே என்று
       அடையாளம் காட்டுபவள்
Priyadharshini
Previous Post Next Post