முழு வெண்மதியே! உன் அழகில் மயங்காதவர்கள் யவருமிலர்..
வைரத்தோள் உடுத்திய உன்னை, அடைய விரும்புகிறேன்...
நான் மனிதன் என்பதை மறந்து! பலரும்
உன்னைக் காண வந்தார்கள் உன்னை இரசிக்க அல்ல;
உன்னால் அவர்களை இரசிக்க வேண்டும் என்பதற்காக...
கவின் மிகு உன்னை, பார்த்து வியக்கிறேன்
"விந்தை மனிதனாக அல்ல"
"உன்னை இரசிக்கும் இரசிகையாக"!!
Aswini D