இசையில்லா கவிதையும் ஒருதலை காதல் தான்!
உணர்வுகளின் பேரிரைச்சல் விலாசத்தை தேடி காகித வீதிகளில்..
வாசிக்கும் ஒவ்வொரு முறையும் மனம் பயணம் செய்து திரும்பும்
நேற்று என்று நீ நினைத்த பொழுதுகளின் ஊடே!
கவிதைகளின் வாசல் கதவில் உன் புன்னகை தெரிந்தால் அது என் வெற்றி!
உன் கண்ணில் நீர் வழிந்தால் அது உன் வெற்றி! ஆம் உனது வெற்றிதான்!
இவ்வளவு கடந்தும் நீ வாழ்ந்து விட்டாயே- அதுவே வெற்றி தான்!
Aarthi