உயிர்பிக்கும் சுவாசம், நம்மை நேசிக்க மறந்தது.
சுவாசிக்கும் தூயக்காற்று நுரைஈரலின் திரை தொட மறந்தது!
காலங்கள் மாறும் என காத்திருந்தோம்...
இங்கே நாட்கள் கரைந்தோடி வருடங்கள் உருண்டோடி கொண்டிருக்கிறது...
சொர்க்கம் - நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம் என்றே நாம் மாறினோம்!
உயிராய் மெய்யாய் நேசித்தோர் உதிர்ந்ததே மிச்சம்...
இங்கே மலர்ந்தது நித்தம் நித்தம் முகக் கவச பழக்கம்..
வாசம் வீசும் மனங்கள் மடிந்ததால் ஓங்கியது சானிடைசர் மனம்...
அகிலமும் உறுமாறி, உருவானது கொரோனா மட்டுமே நிசப்த அலை வரிசைகளில்...!
J Jhansi Rani