உன்னில் தோன்றி - கவிதை போட்டி

உன்னில் தோன்றி உன்னில் மறைய ஆசை

மண்ணில் தொடங்கி வானில் முடிய ஆசை

கடலில் பிறந்து கரையில் வாழ ஆசை

உயிரைக் கொடுத்து உன் உயிராய் இருக்க ஆசை

உன் முதலாய் நான் என் முடிவாய் நீ இருக்க ஆசை

கண்ணில் தொடங்கி கல்லறையில் முடிய ஆசை

நேற்று முதல் நாளை வரை உன்மேல் மட்டும் ஆசை

காலையில் தோன்றி மாலையில் மறையும் நான்

இரவில் தோன்றி பகலில் மறையும் நீ

ஒன்றாய் தோன்றி ஒன்றாய் மறைய ஆசை...

Previous Post Next Post