என் தேடல்கள் - கவிதை போட்டி

காணாத காயத்திற்கு கண்ணீர் சிந்தும் மனங்கள் அறிவதெப்படி

என் தேடல்கள் இன்பத்தில் விலகியதென்று.......

வாடாத மலர்கள் வண்ணத்தில் வாழ்கிறது

கிடைக்காத தேடல்கள் எண்ணத்தில் வாழ்கிறது

நேசிக்க நினைத்தால் தான் புண் பட்ட மனம் கூட புன்னகையைப் பூக்கிறது

வாசிக்க நினைத்தால் தான் பொய் சுமக்கும்

கவிதை கூட ராகங்களாய் மலர்கிறது.....

நிறமில்லா ஓவியம் கூட ஒளிமயமாகத் தோன்றும் ஓவியருக்கு ......

ஆனால் வரமில்லா வாழ்க்கை தான்,

வாழ்பவனுக்கு வழிய வந்து விடுகிறது......

உயிர் மெய் எழுத்தெல்லாம் உருக்குலைந்து

என்னில் இப்படி உலரிக்கொண்டே இருக்கிறது.......

மீட்டாத வீணையில் கேட்காத ஸ்வரங்களுடன்

வார்த்தையில்லா வரிகளைத் தான் தினம்

நானும் வாசிக்கிறேன் உன்னில் உள்ள வாசகனாய்....

இர.அபினா
Previous Post Next Post