உன் நினைவுகள் நிறைந்த வாழ்க்கையில் கனவுகளிலே வாழ்ந்து விடுகிறேன்...
உன்னை காணாத பொழுதுகளில் உன் நினைவுகள் எல்லாம் பாரமானதினால் !!!
சில நேரங்களில் ஏக்கங்களோ கொன்று விடுகிறது என் இரவின் அமைதியினை...
நான் அணைத்து உறங்கும் தலையணையாய் நீ இல்லாததால் தானோ!!!
நான் எழுதிய டைரி என் கனவுகள் சொல்ல கேளடா உன் காதினிலே.....
உனக்கென எழுந்து அதிகாலையில் சமைத்திட விரும்புகிறேன்...
அதை நீ சுவைத்து கொண்டே கேளி செய்ய விரும்புகிறேன்...
அவசரமாக கிழம்பையிலும் நானே உன்சட்டைக்கு பட்டன் போட விரும்புகிறேன்....
அப்போது உன் விரல்கள் என் கூந்தல் கோத விரும்புகிறேன்...
தினமும் வாசல்வரை வந்து வேலைக்கு வழி அனுப்ப விரும்புகிறேன்...
நான் விரும்பிய எல்லாம் ஒரு விமானத்திலே கொண்டு சென்றாயடா!!!
என் கனவுகள் எல்லாம் அந்த மேகங்களுக்குள் மறைந்து விட்டது விமானத்தோடு....
சிறு பிள்ளையென விமான ஓசைக்கெல்லாம் வானம் பார்க்க வைத்தாயடா!!!