என் தந்தைக்கு பிள்ளை - கவிதை போட்டி

தத்தி தத்தி நடக்க விரல் பிடித்து நடை பழக்கிய என் தந்தை அவர்

தள்ளாடும் காலங்களில் தனிமையிலின்றி தாங்கிப் பிடிப்போம்.

எனது பிஞ்சுக் கால்கள் தரையைத் தொடமுன்னரே,

என்னை அணுவணுவாக ரசித்தவர் அவர்!

உதிரம் சிந்தி உழைத்துத் தேய்ந்தவர்!

சிறு சந்தோஷங்களையும் பெரு மகிழ்ச்சியையும் எனக்காக தொலைத்தவரவர்!

எனது சுகத்துக்காக சுமைகளை சுமந்தவரவர் வயதான காலங்களில்...

பிணியில் படுத்தால் எமது பணியே தந்தைக்காக இருக்கட்டும்!

நோயென வந்தால் அவர என் சேய் என பார்ப்பேன்..

கஷ்டப்பட்டு உழைத்து, ராஜாமாதிரி வாழ்ந்தவர்!

வாழவைத்தவர் அவர் கேட்க மாட்டார்; கொடுத்தே பழகியவர்!

தேவையறிந்து பணி செய்வேன் தள்ளாடுகிறார் என்று..

தளர்த்தி விடாதிருப்பேன் அதே கண்ணியத்தை, அதே அந்தஸ்தை....

அவர் இறுதி மூச்சு வரை கொடுப்பேன் கொண்டாடப்படும் தெய்வமவர்....

மனம் விட்டுப் பேசுவோம் இன்று நான் என் தந்தைக்கு பிள்ளை....

நாளை நான் என் பிள்ளைக்கு தந்தை..

கிண்ணியா நௌபர்
Previous Post Next Post