சுடும் வெயில் சுகமாய் தோன்றுகிறது சாலைகளில் செல்லும் வண்டிகளின்
எரிச்சலூட்டும் சப்தம் இன்னிசையாய் ஒலிக்கிறது வழக்கமாக கடிந்துக் கொட்டும்
வாடிக்கையாளர் வாழ்த்துவதுப் போலிருக்கிறது கபசுரக்குடிநீர் கூட பாலில்
கலந்த தேன்போல் தித்திக்கிறது என்ன அதிசயம் நிகழ்ந்திருக்கும்
இவ்வுலகில் என யோசித்தேன் பின் உணர்ந்தேன் இன்று என்னவளின் பிறந்தநாள் என்று...
பிரேம்குமார்.பா