சுமையாக எண்ணாமல் என்னை சுகமாக நினைத்து சுமந்தாயே!
பத்து மாதமும் என்னை பொக்கிஷமாக பாதுகாத்தாயே!
உன் வலிகளை பாராமல் என்னை உலகத்திற்கு கொண்டு வந்தாயே!
இமை கூட அசையாமல் என்னை ஈ எறும்பு தீண்டாமல் காத்தாயே!
ஈடு இணையில்லா அன்பை எனக்கு இமை பொழுதெல்லாம் தந்தாயே!
பல துன்பங்களை கடந்து என்னை பாரமென்றும் கருதாமல் வழத்தாயே!
நான் இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீதான் என்றும் என் தாயே!
Kasthuripoovalingam