இந்த உலகத்தில் நிலையான ஓர் உறவு தனிமை
இதயம் ஏமாற்றம் அடையும் போது நாடுவது தனிமை
வலிகளை குறைப்பது தனிமை
வழிகளை காட்டுவதும் தனிமை
கண்ணீர் துடைக்க யாரும் இல்லாத போதும்
கண்ணீரிலே மனதின் பாரத்தை குறைப்பது தனிமை
தேடும் அன்பு கிடைக்காத போதும்
தேடி வந்து அழைப்பது தனிமை
நிலையான அன்பு இல்லையென்ற போதும்
நிரந்தரமாக துணையிருப்பது தனிமை
நிம்மதி கொடுப்பது தனிமை
நிழலாக இருப்பது தனிமை
தன்னம்பிக்கை கொடுப்பது தனிமை
தன்னை உணர வைப்பதும் தனிமை
ஞானம் பிறக்க வைப்பது தனிமை
ஞானிகளை உருவாக்குவதும் தனிமை
தனிமையிலே வாழும் மனதுக்கு
தனிமை பிரியாத உறவாகத்தான் இருக்கும்
Kasthuripoovalingam