பூக்க மறந்தது பூ
பெண்ணே உன் முகம் பார்த்து
பாட மறந்தது குயில்
பெண்ணே உன் குரல் கேட்டு
ஆட மறந்தது மயில்
அன்பே உன் நடையை பார்த்து
செதுக்க மறந்தான் சிற்பி
சிலையே உன்னை பார்த்து
சித்திரனும் வரைய மறந்தான்
சித்திரமே உன்னை பார்த்து
கவிஞனும் எழுத மறந்தான்
கவியே உன்னை பார்த்து
விடிய மறந்தது இரவு
வெண்ணிலவே உன்னை பார்த்து
பேச மறந்தது என் இதழ்கள்
பெண்ணே உன் அழகைப் பார்த்து
Kasthuripoovalingam