நதியின் ஓரம் நடந்து போகும் மானே
உன் நடையை காண திரண்டு வருது மீனே
நீ சிரிக்கும்போது தேடி வருது தேனே
சிரிக்கும் மலர் நீ என்றுதானே
நீ பேசும் பேச்செல்லாம் தமிழ்தானே
நீ பேசும்போது என் காதில் கேட்பது சங்கீதம்தானே
நீ பார்க்கும் பார்வை இருவிழியில்தானே
நான் மறந்துபோனேன் என் மறு வழியைதானே
Kasthuripoovalingam